நாகை மாவட்டத்தில் இந்தாண்டு பொதுப்பணித் துறை மூலமாக 131 குடிமராமத்துப் பணிகள், 50 திட்டப்பணிகள் மூலமாக காவிரி, அதன் கிளை ஆறுகள் தூர்வாரப்பட்டுவருகின்றன.
தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி, அன்னப்பன்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, பொதுப்பணித் துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.