கோவை மாவட்டம், வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிக்கு பின்புறம் முற்கள் நிறைந்த இடத்தில் குறை பிரசவத்தில், பிறந்த ஆண் குழந்தையை சாக்குப்பையில் சுற்றியவாறு பெற்றோர் வீசிச் சென்றுள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் போத்தனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் குழந்தையின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு கிடைக்கப் பெற்ற தடயங்கள், குழந்தையின் மீது சுற்றப்பட்டிருந்த சாக்குப்பை போன்றவற்றை கைப்பற்றி, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.