தமிழ்நாடு முழுவதும் நேற்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் உத்தரவின்படி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, கந்தலி, ஆலங்காயம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 9 ஆயிரத்து 644 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 8 ஆயிரத்து 602 இருசக்கர வாகனங்கள், 105 ஆட்டோக்கள், 20 நான்கு சக்கர வாகனங்கள் என 8 ஆயிரத்து 727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.