ETV Bharat / briefs

விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடிய கனடா ரசிகர்கள்! - விஜய் பிறந்தநாள்

கனடாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர், அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கி உதவி செய்துள்ளனர்.

விஜய்
விஜய்
author img

By

Published : Jun 22, 2020, 4:09 PM IST

நடிகர் விஜய் இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கனடாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர், அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கி கொண்டாடினர்.

இந்த மன்றத்தில் இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள், மருமகன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இது குறித்து இசையமைப்பாளர் பரத்வாஜ் வெளியிட்டுள்ள காணொலியில், "கனடாவில் உள்ள டொரண்டோவில் செயல்படும் நடிகர் விஜய்யின் நற்பணி மன்றம் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள், நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளோம்.

இதில் எனக்கு மகிழ்ச்சி என்னவென்றால் எனது மகளும், மருமகனும் இந்தச் சேவையில் ஈடுபட்டனர். இதன்மூலம் அவர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், ஒரு தமிழ் நடிகருக்கு வெளிநாட்டில் நற்பணி மன்றம் அமைத்து உதவிசெய்வது என்பது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயம். இவரின் நற்பணி தொடரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.