திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் வசித்துவருபவர் திருக்குமரன். இவர் இதே பகுதியில் வீடு கட்டி வருகிறார்.
இந்நிலையில், இன்று கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த மண் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு கட்டட பணியில் ஈடுப்பட்டிருந்த மிட்டாளம் வன்னிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி பலராமன் (55) என்பவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் பலராமனை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:மதுபான பார் ஊழியர் சந்தேக மரணம் - காவல்துறை விசாரணை!