ETV Bharat / briefs

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்தியாவுக்கு துணை நிற்கும் பிரான்ஸ்! - பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி

பாரிஸ் : இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்தியாவுக்கு துணை நிற்கும் பிரான்ஸ்!

author img

By

Published : Jun 30, 2020, 6:30 PM IST

இந்தியா - சீனா எல்லை பகுதியான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் கடந்த மே மாதம் இந்திய ராணுவ அலுவலர்கள் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டுவந்தபோது, சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்ததால் பிரச்னை வெடித்தது.

அப்போது இருநாட்டு வீரர்களும் கட்டை, கம்பிகள் கொண்டு தாக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இருநாட்டு உயர் அலுவலர்களும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாக பிரச்னை தணிந்ததாகத் தோற்றம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், இந்தியாவின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு அருகே ஜூன் 15ஆம் தேதி இரவு பணியிலிருந்த ராணுவ அலுவலர் கர்னல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட இந்திய படைவீரர்களை சீன ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மேலும் சில வீரர்களையும் கைது செய்து, அவர்களின் முகத்திற்கு நேர துப்பாக்கிகளைக் காட்டி, அவர்களையும் கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளனர்.

கிழக்கு லடாக்கில் ரோந்துப் பணியிலிருந்த எண் 14ஆம் வரிசையைச் சேர்ந்த சீன ராணுவத்தினர் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். நள்ளிரவில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் இதுவரை ஒரு சில அலுவலர்கள் மட்டுமே இறந்ததாக அந்நாட்டு அரசு கூறி வந்தாலும், அங்கே 43 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சீனாவின் எல்லைக் கோடு ஒப்பந்தத்தை மீறிய இந்த அத்துமீறலைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிற்கு துணை நிற்பதாகவும் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.