தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் லட்சுமி மில் மேம்பாலம் முதல் ரயில்வே நிலையம் வரை ஓடையை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கட்டடங்களை அகற்றி விட்டு சாலையை நீதிமன்ற உத்தரவுப்படி விரிவாக்கம் செய்ய வேண்டும்.
தற்போது நடக்கும் சாலை விரிவாக்க பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கோவில்பட்டி மார்க்கெட் ரோடு சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினருடன் துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன், வட்டாசியர் மணிகண்டன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.