ETV Bharat / briefs

திமுகவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! - DMK

சென்னை: தண்டையார்பேட்டையில் திமுகவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

BJP protests against DMK in Chennai
BJP protests against DMK in Chennai
author img

By

Published : Sep 22, 2020, 4:27 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், நங்கநல்லூரில் பாஜகவின் மகளிர் அணி சார்பாக வரையப்பட்ட சுவர் விளம்பரத்தை திமுகவினர் அழித்துள்ளனர்.

மேலும் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது திமுகவினர் வந்து மிரட்டியதாகவும், இருசக்கர வாகனத்தில் மோதி மகளிர் இருவரை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் அராஜகத்தை கண்டித்து இன்று தண்டையார்பேட்டை மணிகூண்டு பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் மாநில ஓபிசி அணித் தலைவர் லோகநாதன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில், ஏராளமானோர் கலந்து கொண்டதால் சாலையில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

பின்னர் இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தண்டையார்பேட்டை காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்துச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.