லடாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தற்போது அவர்களுக்கு இந்திய நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. மேலும் சீனாவிற்கு பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சீன பொருள்களை புறக்கணிக்கும் உறுதிமொழியை பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்று வருகின்றனர். அந்தவகையில் பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி திருச்சியில் "இனி வரும் நாட்களில் சீனா பொருள்களை வாங்க மாட்டோம், சீனா நாட்டு மொபைல் செயலிகளை பயன்படுத்த மாட்டோம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.