ETV Bharat / briefs

டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகளை நிரந்தரமாக தடை செய்க - பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர் : டெல்டா பகுதிகளில் உள்ள ஓ.என்.ஜி.சியின் எண்ணெய் கிணறுகளின் செயல்பாட்டிற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

 Ban ONGC oil wells in Delta areas Permanently -  PR Pandian

author img

By

Published : Jun 19, 2020, 6:57 PM IST

இது தொடர்பாக, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, "அஸ்ஸாம் மாநிலத்தின் தீ விபத்தைக் கண்டிருக்கும் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயு கிணற்றால், திப்ருகார் மாவட்டமே பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் அம்மாநில அரசு தவித்து வருகிறது.

அது போல் காவிரி டெல்டா குடியிருப்பு பகுதிகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் பற்றி எரியத் தொடங்கினால், அதன் பேரழிவு நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு இருக்கும். எனவே, அந்த பேராபத்தை உணர்ந்து டெல்டா பகுதிகளில் செயல்பாட்டில் இருக்கும் ஓ.என்.ஜி.சி கிணறுகளை உடனடியாக மூடவேண்டும். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா விவசாயப் பகுதிகளில் எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகளை அமைப்பதை நிரந்தர தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் உள்நோக்கத்தோடு கடன் வழங்க மத்திய அரசு தடை விதித்திருப்பதை நீக்க வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பழைய நிலையிலேயே கடன் கொடுக்க அனுமதிக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். அதற்கு விவசாயிகள் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

அமைச்சரின் உத்தரவாதத்தின் அடிப்படையில், விவசாயிகளுக்கு உடனடியாக கடன்களை வழங்கும் நடவடிக்கையை மாநில அரசின் கூட்டுறவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 7 தினங்களுக்குள் பாசன நீர் கடைமடை சென்றிருக்க வேண்டும். ஆனால், கிளை ஆறுகளில் கூட இந்த நாள் வரை தண்ணீர் வந்துசேரவில்லை. பல இடங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை காரணம் காட்டி காலதாமதப்படுத்தப்படுகிறதோ என அஞ்ச தோன்றுகிறது. மேலும், ஆறுகளில் சட்டவிரோதமாக 50 அடி ஆழம் மணல் கொள்ளை நடந்ததால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

எனவே, அக்டோபர் 20ஆம் தேதி அன்று வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன் குறுவை அறுவடைப் பணிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளதால், அதற்கு தேவையான 18 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

டெல்டா பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.