நடப்பு நிதியாண்டில், அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், அந்த இலக்குக்கு மேல் கூடுதலாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
எனவே, இந்த நிதியாண்டில் (2019-20) பங்கு விற்பனை வருவாய் 85 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டில் 90 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து இருப்பதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.