உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள மத்திய கட்டளை தலைமையகத்திற்கு இந்திய ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நரவனே செல்ல இருக்கிறார். சீனா - நேபாள எல்லைகளில் தற்போதைய நிலைமை மற்றும் தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல்முறையாக லக்னோவிற்கு செல்கிறார்.
லக்னோ பயணத்தின்போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோரையும் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நேற்று முன்தினம் தேஜ்பூரை தளமாகக்கொண்ட 4 கார்ப்ஸ் தலைமையகத்திற்கு சென்று அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிமில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக இந்தியாவின் ராணுவத் தயாரிப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மூத்த ராணுவ தளபதிகளுடான உரையாடலில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.