2019ஆம் ஆண்டுக்கான மும்பை டி20 கிரிக்கெட் லீக் தொடர் மே 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கான ஏலம் இன்று நடைபெற்றது.
இதில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயரும் ஏலத்தில் இடம்பெற்றிருந்தது. அவரை ஆகாஷ் டைகர்ஸ் அணி ஐந்து லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இந்தத் தொடரில், மும்பை நட்சத்திர வீரர்களான பிரித்விஷா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஆகியோர் விளையாட உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் இந்தத் தொடரின் தூதராக செயல்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.