ETV Bharat / briefs

கோவிட்-19 எதிரான போருடை : கவசமாகும் கோவை நிறுவனத்தின் ஹைக்யூ வைரோப்ளாக் !

கோவை: கரோனா வைரஸ் நோய்க்கிருமிகளை செயலிழக்கச் செய்யும் ஹைக்யூ வைரோப்ளாக் என்.பி.ஜே 03 வகை நூலிழையை சிவா டெக்ஸியார்ன் எனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கோவிட்-19 எதிரான போருடை : கவசமாகும்  கோவை நிறுவனத்தின் ஹெய்க்யூ விரோப்லாக்

author img

By

Published : Jun 17, 2020, 7:03 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்துப் போராடி வருகின்றன. சர்வதேச நாடுகள் கோவிட்-19க்கு தடுப்பூசி மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கோவிட்-19 பரவலுக்கு எதிராக மக்களை காக்க முன்னிலையில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக அளிக்கப்படும் பிபிஇ உடைகளின் தரத்தையும், நோய்த்தடுப்பு ஆற்றலையும் மேம்படுத்த ஜவுளித்துறை களம் கண்டிருந்தன.

சுவிஸ், டைவான் நாட்டைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் நீண்ட கால கூட்டு முயற்சியில் ஈடுபட்டு அதை சாத்தியப்படுத்தியும் உள்ளன. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனமான ஹைக்யூ மெட்டீரியல்ஸ் ஏ.ஜி. மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த சிறப்பு ரசாயன ஜின்டெக்ஸ் கார்ப்பரேஷனுடன், சிவா டெக்ஸியார்ன் இணைந்து ஹெய்க்யூ வைரோ பிளாக் என்.பி.ஜே 03 என்னும் நூலிழையை உற்பத்தி செய்துள்ளது.

ஹைக்யூ வைரோப்ளாக் என்.பி.ஜே 03 நூலிழைகள் வைரஸ் கிருமிகளை மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே செயலிழக்கச் செய்து கொல்லும் வகையில் அதி நவீன தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதே இதன் தனிச்சிறப்பு. ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு பிறகு தற்போது அது வர்த்தகத்திற்கு வரவுள்ளது. இதை தமிழ்நாட்டின் மேன்செஸ்டர் என புகழப்படும் கோவை மாநகரில் இயங்கி வரும் சிவா டெக்ஸியார்ன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஊடகங்களிடையே பேசிய சிவா டெக்ஸியார்ன் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எஸ். சுந்தரராமன் கூறுகையில், "கோவிட்-19க்கு எதிரான போரில், பிபிஇ உற்பத்தி செய்து வழங்குவதில் நாங்கள் முன்னணியில் உள்ளோம். எங்கள் தொழில்நுட்ப ஜவுளி பிரிவானது, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் மூத்த உறுப்பினராகும். சுய பாதுகாப்பு கவச உடைகளான பிபிஇ உற்பத்திக்கு தேவையான நூலிழையை வழங்கி வரும் தகுதிவாய்ந்த சப்ளையர்களில் ஒன்றாக உள்ளது.

எங்கள் நிறுவனத்தின் பிபிஇ உற்பத்தி செயல்முறைகளில் தற்போது மற்றொரு உயர் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஹைய்க்யூ வைரோ ப்ளாக் என்.பி.ஜே 03 வகை நூலிழைகளை இணைத்துள்ளோம். பிபிஇ பாதுகாப்பு உடைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கான தீர்வுகளை வழங்கும் வல்லமைமிக்க தொழில்நுட்பத்தை நாங்கள் நாட்டிற்கு சமர்பிக்கிறோம்" என்றார்.

அறிமுக நிகழ்வு குறித்து ஹைய்க்யூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் கார்லோ சென்டோன்ஸ் கூறுகையில், "வைரஸ் தடுப்பு துணிகளுக்கான உலகளாவிய சந்தைப்படுத்தலில் எங்கள் நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு சர்வதேச சான்றிதழ்களைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நவீன வெள்ளி மற்றும் சிறு குமிழ் (வெசிகல்) தொழில்நுட்பத்தின் இணைப்பில் எங்களின் ஹைய்க்யூ வைரோ ப்ளாக் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது மனிதர்களைத் தாக்கும் கரோனா வைரஸ் 229 ஈ-க்கு எதிராக போராடும். 99.99 விழுக்காடு வைரஸின் தாக்கத்தை நிர்மூலமாக்கி ஆற்றல் கொண்டதென திறன் நிரூபிக்கப்பட்டது. மேலும், இது பயன்பாட்டாளர்களுக்கு மிகுந்த பாதுகாப்பானது. இதில் எந்தவிதமான நச்சுத்தன்மையுமற்றது. இதற்கான காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிபிஇ உற்பத்தியில் வைரோ பிளாக் நூலிழைகளை இந்தியாவில் சிவா டெக்ஸியார்னுடன் இணைந்து அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.