ETV Bharat / briefs

அமமுக நிர்வாகி கொலை வழக்கு: சரணடைந்த 4 பேர்

பெரம்பலூர் : அமமுக நிர்வாகி கொலைக் குற்றவாளிகள் நான்கு பேர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரணடைந்தனர்.

ammk party murder issue
ammk party murder issue
author img

By

Published : Jun 5, 2020, 5:52 AM IST

பெரம்பலூரில் அமமுக மாணவரணி நகரச் செயலாளர் பாண்டி (எ) வல்லத்தரசு (24) என்பவர் கடந்த இரண்டாம் தேதி, இரவு முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பெரம்பலூர் சங்குபேட்டையைச் சேர்ந்த பிரகாஷ், விஜயராஜ், கார்த்தி, ராஜா ஆகிய நான்கு பேர் முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து பெரம்பலூர் காவல் துறையினர் கொலைக் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் குற்றவாளிகளான பிரகாஷ் (30) , விஜயராஜ் (30), கார்த்தி (29) ராஜா (54) ஆகிய 4 பேர் சரணடைந்தனர்.

வழக்கை விசாரித்த கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டின் நீதிபதி சரவணபாபு, குற்றவாளிகளை வரும் ஒன்பதாம் தேதி வரை ஐந்து நாட்கள் குளித்தலை கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து நான்கு பேரும் குளித்தலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒன்பதாம் தேதிக்குப் பிறகு, குற்றவாளிகளை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.