ETV Bharat / briefs

ஊராட்சி மன்றத் தலைவரின் லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு! - Thiruvallur Lorry Accident

திருவள்ளூர்: தடுப்பணை கட்டுமானப் பணிக்காக மண் கொண்டு வந்த அதிமுக ஊராட்சி மன்றத் தலவைரின் லாரி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

A Youth Dead By Lorry Accident In Thiruvallur

author img

By

Published : Aug 15, 2020, 11:12 AM IST

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பிஞ்சிவாக்கம் பகுதியில், இரண்டு ஆயிரத்து 250 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே, 7.58 கோடி ரூபாயில் புதிய தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம், தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வந்தது.

திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள கூவம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆற்றின் இருபுறமும் கரை அமைக்கும் பணிக்காக கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுகவைச் சேர்ந்த சத்தரை ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் என்பவரின் லாரி மூலம் மண் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் படி, நேற்று அகரம் பகுதியிலிருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்ட மண்ணை கொட்டுவதற்காக ஆற்றுப் பகுதியில் இறங்கிய லாரி பின்னால் வருவதற்காக இயக்கியபோது பேரம்பாக்கத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது பலமாக மோதியுள்ளது.

அதில், லாரியின் டயரில் சிக்கிய இளைஞர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கடம்பத்தூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த நபர் பேரம்பாக்கத்தில் உள்ள கடிகாரம் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்வததும், உரிமையாளரிடம் பணத்தை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் போதிய ஆள்கள் இல்லாததாலும், லாரியை பின்னால் இயக்கும் போது அதனை சரி செய்ய யாரும் இல்லாததால் இது போன்ற உயரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பிஞ்சிவாக்கம் கூவம் ஆறு அருகிலேயே உள்ள ஏரியிலிருந்து மண்ணை எடுக்காமல் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியிலிருந்து மண்ணை கொண்டு வருவதால் கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

பொதுப் பணித்துறையினரின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு சுமூக தீர்வு காணவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.