கோயம்புத்தூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள வி.ஜி.எம் மருத்துவமனை அருகில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரும் பயணித்தார். அப்போது, எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த 60 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அந்த பெண் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்துவைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.