சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை சட்டவிரோதமாக விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவல் துறையினர் அந்தக் கடையில் சோதனை செய்தனர்.
அப்போது, கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளர் விஜயகுமார் (40) என்பவரை காவல் துறையினர் கைது செய்து குடோனில் பதுக்கி வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.