ETV Bharat / briefs

கரூர் எம்பி, எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு! - அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி

கரூர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர் ஜோதி‌மணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

A Case Registered To Karur MP And MLA
A Case Registered To Karur MP And MLA
author img

By

Published : Sep 29, 2020, 5:18 PM IST

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக, கூட்டணிக் கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பலர் மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், கலந்து கொண்ட கரூர் எம்பி ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி உள்பட 2019 பேர் மீது, அமைதிக்கு பங்கம் விளைவித்தல், 144 தடை உத்தரவு மீறல், பொது இடங்களில் அதிக நபர்கள் கூடியது உள்ளிட்ட மூன்று பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.