மதுரையில் கரோனா தொற்றின் வேகம் பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக 100க்கும் குறைவாகவே பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 13 ஆயிரத்து 590 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 12 ஆயிரத்து 249 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 1001 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 340 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.