ஸ்ரீநகரின் ரெய்னாவரி பகுதியில் உள்ள கலாய்-அந்தரைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் மீது நோவாட்டா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார். இதுகுறித்து விசாரணை செய்த காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
அதன்பின்னர் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி இரவு இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. அதன் பிறகு அவரின் மாதிரிகள் எடுத்து கரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் விளைவாக அவரை கைது செய்த ஏழு காவல் துறை அலுவலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அந்த காவல் துறையினரின் மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.