சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆறுமுகம். இவர் மகள் மேகலாவிற்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூரையைச் சேர்ந்த 25 பேர், மினி ஆட்டோவில் பெத்தநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தலைவாசல் அருகே மினி ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 20 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தலைவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தலைவாசல் காவல் துறையினர், முழு ஊரடங்கையும் மீறி மஞ்சள் நீராட்டு விழாவிற்கு 25 பேரை மினி ஆட்டோவில் ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மருதமுத்துவை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க:பழக்கடைக்காரரை அடித்து வீசி, நிற்காமல் சென்ற கார்: அதிர்ச்சி வீடியோ