கிருஷ்ணகிரி அணையில் எட்டு மதகுகள் பழுதடைந்து தண்ணீர் சேமிக்கும் பணிகள் பாதிக்க பட்ட நிலையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் 20 கோடிய 43 லட்சம் ரூபாய் மதிப்பில் மதகுகள் மாற்றும் பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் அப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.
அந்த பணிகளை தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் தலைமை பொறியாளர் அசோகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குடிமராத்து பணிகள் 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக மீதமுள்ள பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் .
கிருஷ்ணகிரி அணையில் எட்டு மதகுகள் மாற்றும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிந்துள்ளது. இன்று முதல் தண்ணீர் சேமிக்கும் பணிகள் தொடங்குகிறது.
கடந்த மாதம் முதலமைச்சர் அணையின் பணிகளை பார்வையிட்டார். அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று பாராட்டினார். கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் இன்று முதல் 52 அடிக்கு முழு கொள்ளளவாக சேமிக்கப்படும்" என்றார்.