திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த்திடம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆறுமாதத்திற்கு கடன் தவணையை வசூலிக்கக் கூடாது.
கரோனா நோய் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை- எளிய குடும்பங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.