ஆப்கானிஸ்தான் மேற்கு கோரில் உள்ள சோதனைச்சாவடி வாயிலில் நுழைந்த தலிபான்கள் அங்குள்ள 10 காவல் துறையினரை கொன்றதாக உள்ளூர் காவல் துறைத் தலைவர் ஃபக்ருதீன் தெரிவித்தார்.
இதற்கிடையில், கிழக்கு கோஸ்ட் மாகாணத்தின் அலி ஷெர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக, மாகாண காவல் துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் அடெல் ஹைதர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் இறந்தவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் வாலி எக்லாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.