திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மரவனூர் அருகேயுள்ள சின்ன சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். குறி சொல்லும் தொழில் செய்து வரும் இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுவந்த நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த தனது மகள் உதயதர்ஷினியுடன் நேற்று பள்ளிக்குச் சென்று தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ராஜேந்திரன் வாங்கி வந்துள்ளார்.
அப்போது, இருந்தே சற்று சோகத்துடன் இருந்து வந்த உதயதர்ஷினி, இரவு வீட்டின் உள்ளே தனியாக தூங்கிக் கொண்டிருந்த நிலையில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை காவல் துறையினர் இறந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை காவல் துறையினர், பள்ளி மாணவி உயிரிழந்தற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.