தமிழ்நாடு 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இரண்டு தொகுதிகளாக இருந்த பாடப்புத்தகம் ஒரு தொகுதியாக மாற்றப்பட்டு புதிய பாடப்புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் வரலாறு, புவியியல், குடிமையியல் போன்ற பாடப்பிரிவுகளில் பல வினாக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேசமயம் காவிரி, தாமிரபரணி வேறுபடுத்துக வினாவும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 50 விழுக்காடு பாடச்சுமை நீக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான உரிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.