தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.04) ஒரே நாளில் ஐந்தாயிரத்து 976 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 51 ஆயிரத்து 827ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 687ஆக உள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கரோனாவால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 903ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 909 பேர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று 98 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் ஆறாயிரத்து 866 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை.
திருச்சி மாவட்டத்தில் இதிவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122ஆக உள்ளது. மேலும், 915 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.