இப்படி நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. திருக்குவளை என்ற குக்கிராமத்திலிருந்து கிளம்பிய இளைஞனுக்கு தமிழ்நாட்டை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருந்தது; தொலைநோக்குப் பார்வை இருந்தது. திருவள்ளுவர், பெரியார், அண்ணா ஆகிய மூவரும் அவருக்கு மூச்சுக் காற்றாக இருந்து செயல்படுத்தியவர் என்ற அவரது கனவை நிறைவேற்றும் மாமனிதராக கருணாநிதி செயல்பட்டார்.
அவரது சிறப்புச் சித்திரங்களுக்குச் சான்றாக வள்ளுவர் கோட்டமும், குமரியில் 133 அடி வள்ளுவர் சிலையும் எழுந்திருக்கின்றன. தன்னை வசைபாடியவர்களையும் வாழ்த்தியவர் கருணாநிதி. இப்படி அரை நூற்றாண்டாக நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி.
40 ஆண்டுகளுக்கு முன்பே தனது கல்லறையில் 'ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு எடுக்கிறார்' என்ற வாசகத்தை பொறிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தன்னை தந்து தாய் நாட்டை உருவாக்கிய கருணாநிதியைப் போற்றும்விதமாக அவரது சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்கால தலைமுறைகளும் அறியும் வகையில் நவீன விளக்குகளுடன் சென்னை காமராஜர் சாலை நினைவிட வளாகத்தில் 2.1 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலையாரை தரிசித்த துர்கா ஸ்டாலின்