ETV Bharat / state

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - அதிமுக, பாஜக வெளிநடப்பு - வேளாண் சட்டங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்
author img

By

Published : Aug 28, 2021, 10:10 AM IST

Updated : Aug 28, 2021, 2:02 PM IST

13:55 August 28

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார்.

மத்திய அரசு கடந்தாண்டு மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது. இதற்கு எதிராக சில மாநிலங்களின் அரசுகள் எதிர்வினையாற்றின. மேலும், அச்சட்டத்திற்கு எதிராக தங்கள் மாநிலப் பேரவைகளில் தீர்மானமும் நிறைவேற்றின. அந்த வகையில் தமிழ்நாடு அரசும் இன்று இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.  

வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். பின்னர், இது குறித்து அவர் பேசியுள்ளார். அதற்கு முன்னதாக இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் என்ன என்று பார்க்கலாம்.  

  1. விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020,
  2. வேளாண்மை உற்பத்தி மற்றும் வர்த்தக மேம்பாடு 2020,
  3. அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் 2020

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது முன்மொழிந்து ஸ்டாலின் பேசுகையில், "வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள் இந்தச் சட்டத்தால் லாபகரமான விலையைப் பெற முடியவில்லை. இந்தச் சட்டங்கள் - உணவுப் பொருள்கள் விளைவிக்கும் உழவர்களைவிட ஒப்பந்ததாரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.

12:06 August 28

உழவர்களின் நலனே முக்கியம்

வேளாண் சட்டங்கள்
வேளாண் சட்டங்கள்

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டத்தால் செயற்கையாகத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசின் மூன்று சட்டங்களும் உழவர்களுக்குப் பாதகமாகவே அமைந்துள்ளன. எனவே உழவர்களைப் போற்றும் இந்த அரசு, அவர்களின் வாழ்வையும் போற்றும். 

உழவர்களைப் பாதுகாக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்துசெய்யப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் இந்தத் தீர்மானத்தை மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

10:06 August 28

உழவர்களின் வாழ்வை இந்த அரசு போற்றும்

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

இந்தத் தீர்மானத்தின் மீது அதிமுக, பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: சொன்னபடி வேட்டையைத் தொடங்கிய அமெரிக்கா: ஆப்கனில் திக்... திக்... திக்...!

Last Updated : Aug 28, 2021, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.