ETV Bharat / state

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிவிப்பு : அமைச்சரின் பட்ஜெட் உரை... - விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை உடனுக்குடன் Minister Panneerselvam presending Tamil Nadu Agriculture Budget

author img

By

Published : Mar 19, 2022, 9:25 AM IST

Updated : Mar 19, 2022, 12:39 PM IST

12:06 March 19

வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட் உரை நிறைவு

தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 1 மணி 55 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

11:58 March 19

சட்டப்பேரவையில் 2வது முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல், பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • கடந்தாண்டு வேளாண்துறைக்கு ரூ.32,775.78 கோடி ஒதுக்கப்பட்டது.
  • பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம் போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி ஒதுக்கீடு
  • 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும்

11:45 March 19

விவசாயிகளுக்கு வழிகாட்ட இணையதளம்

  • வேளான் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு ரூ.30.56 கோடி
  • விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ.10 கோடியில் திட்டம்
  • உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி
  • அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம்
  • 200 விடுதிகளில் 20 லட்சம் மதிப்பீட்டில் திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டம்

  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டம் ரூ.300 கோடி ஒதுக்கீடு
  • விவசாயிகளுக்கு வழிகாட்ட தமிழ் மண்வளம் என்ற இணையதளம் உருவாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

11:43 March 19

விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிகோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

11:17 March 19

காலை, மாலை நேரத்திலும் உழவர் சந்தை

  • மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு
  • உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை
  • புதிதாக 10 உழவர் சந்தைகள்
  • வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க 3 கோடி ஒதுக்கீடு
  • டெல்டா பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வார 5 கோடி ஒதுக்கீடு என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

11:08 March 19

செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள்

  • பம்பு செட்டுகள் இயக்க தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க, தானியங்கியாகவோ அல்லது செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும் திட்டம் ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
  • புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
  • சிறு தானிய, எண்ணெய் வித்து மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மானியத்தில் வழங்க 5 கோடி நிதி ஒதுக்கீடு

3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள்

  • சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க 10 கோடி ஒதுக்கீடு
  • 3 மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும்
  • முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ₹65.34 கோடி ஒதுக்கீடு
  • ரூ. 65 கோடியில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

11:00 March 19

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5157 கோடி

  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பனை மரக்கன்றுகள் வழங்கப்படும்
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு ₹5157 கோடி வழங்கப்படும்
  • டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ₹80 கோடி ஒதுக்கீடு
  • அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ₹5 கோடி ஒதுக்கீடு
  • தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை

3 மிகப்பெரிய உணவு பூங்கா

  • விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ₹604.73 கோடி செலவில் 2750 கி.மீ நீள சாலைகள் அமைக்கப்படும்
  • ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்
  • மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ₹381 கோடி ஒதுக்கீடு என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10:54 March 19

உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும்

  • 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ₹15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ₹10 கோடி ஒதுக்கீடு
  • சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ₹15 கோடி ஒதுக்கீடு
  • தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ₹27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும்
  • தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ₹8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்

தக்காளி உற்பத்தியை அதிகரிக்க மானியம்

  • திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும், இதற்காக ₹381 கோடி ஒதுக்கீடு
  • தக்காளி விலையை சீராக்க உற்பத்தி குறைவாக உள்ள மாதங்களில், உற்பத்தியை அதிகரிக்க மானியம் வழங்கப்படும்
  • ₹8000 மானியத்தில் இடுபொருட்கள் தக்காளி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10:49 March 19

10 வருசமா இதுக்கு போராடுனோம்

  • கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும், கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹2950 வழங்கப்படும் என்றார்.
  • அதன் பின், வேளாண் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்தி பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், 10 வருசமா இதுக்கு போராடுனோம்.. இப்போ எதிர்க்கட்சிகளும் (அதிமுக) இதுக்கு கை தட்டலாம்..” என்று தெரிவித்தார்..
  • அப்போது, அவையில் சிரிப்பலை எழுந்தது

10:38 March 19

கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2950

  • விவசாயிகள் இடுபொருட்களை பெரும்போது பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை
  • உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை, விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை
  • விவசாய கூலித் தொழிலாளர்களை வட்ட, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க புதிய திட்டம் தொடங்கப்படும்
  • கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும்
  • கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹2950
  • கரும்பு சாகுபடிக்கு உதவியாக ₹10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம்
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10:32 March 19

விதை முதல் விளைச்சல் வரை - மின்னனு முறையில் சேவைகள்

  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.
  • அதன் படி, 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்
  • பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க ₹3 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ₹15 கோடி ஒதுக்கீடு
  • சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு
  • தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு
  • சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்
  • வேளாண்துறையில் உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை முழுமையாக மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை
  • விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை

ட்ரோன் மூலம் பூச்சிமருந்து

  • விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை
  • திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க படிப்படியாக கணினி வழியே பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10:26 March 19

வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு

  • வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ₹1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்
  • இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு அளிக்கும்
  • வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்
  • முதலமைச்சர் தலைமையில் சிறுதாணிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும்

  • செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மர வகைகளின் கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்
  • ₹12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்
  • ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10:23 March 19

விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள்

  • 3204 கிராம பஞ்சாயத்துகளில் ₹300 கோடி மாநில அரசின் நிதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்
  • உழவர்களை கைப்பிடித்து வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல ஊரகவளர்ச்சி துறையுடன் இணைந்து வேளாண்துறை பாடுபடும்
  • 150 வேளாண் தொகுப்புகளை 7,500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட ₹5 கோடி ஒன்றிய அரசு - மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்
  • நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும்
  • விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ₹300 கோடி ஒதுக்கீடு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ₹71 கோடி நிதி ஒதுக்கீடு
  • இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ₹400 கோடி ஒதுக்கீடு 30,000 மெட்ரிக் டன் அளவில் நெல் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்

10:18 March 19

இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கச் சிறப்பு நிதி

  • தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது
  • புவி வெப்பமடைவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது
  • காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர்களைச் சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும்
  • சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மாநில வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது
  • இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கச் சிறப்பு நிதி ஒதுக்கீடு

10:13 March 19

விவசாயிகளின் குறைகளை தீர்க்க குழு

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசிக்கும் வேளாண் பட்ஜெட் உரை...

  • 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி நடக்கிறது
  • 20,000 விவசாயிகளுக்கு ஓராண்டில் ₹5 கோடி மதிப்பில் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன
  • குறுவை சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்
  • தமிழ்நாட்டில் தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • பருவமழையால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன
  • விவசாயிகளின் குறைகளை தீர்க்க குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

10:06 March 19

வேளாண் பட்ஜெட் உரை

  • வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசிக்கும் வேளாண் பட்ஜெட் உரை...

86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10:00 March 19

வேளாண் பட்ஜெட் தாக்கல்

வேளாண் பட்ஜெட் உரையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சந்தித்து வாழ்த்து பெற்ற போது...!

சட்டப்பேரவையில் 2வது முறையாக வேளாண் துறைக்கென தனி வேளாண் பட்ஜெட் 2022-2023, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

  • வேளாண் பட்ஜெட் உரை தொடங்கியது...

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022 தாக்கல் - நேரலை

09:42 March 19

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களின் வாழ்த்துக்களுடன் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன்.#TNAgriBudget2022@arivalayam pic.twitter.com/sG7TMhvIle

    — MRK.Panneerselvam (@MRKPanneer) March 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.

09:30 March 19

வரலாற்றில் முதன்முறையாக

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில், தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் சட்டப்பேரவையில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

09:06 March 19

2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் காலை 10 மணி அளவில் தாக்கல் செய்கிறார்.

Last Updated : Mar 19, 2022, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.