ETV Bharat / city

முதுநிலை பட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! - PG application from oct 10

anbazhagan kp
anbazhagan kp
author img

By

Published : Oct 9, 2020, 2:58 PM IST

Updated : Oct 9, 2020, 6:23 PM IST

14:52 October 09

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கு இணையதளம் மூலம் அக்டோபர் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.

முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-21ஆம் நடப்பு கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasapg.in, www.tngasapg.org இணையதளம் மூலம் அக்டோபர் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மேற்குறிப்பிடப்பட்ட இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம்.  

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவுசெய்ய ரூ.2 பதிவு கட்டணமாகவும், விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 58 சேர்த்து 60 ரூபாய் செலுத்தப்பட வேண்டும். எஸ்.சி.எஸ்.டி, விண்ணப்பதார்களுக்கு பதிவுக் கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை அக்டோபர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் www.tngasapg.in என்ற இணையதளத்தில் உள்ள அட்டவணைப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் கல்லூரிகள், இடங்கள், பாடப்பிரிவுகள், சேர்க்கை விபரங்களை www.tngasapg.in, www.tngasapg.org என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் 044- 22351014, 044-22351015, 044-28276791 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு என்ற care@tngasapg.org, tndceoffice@gmail.com முகவரி மூலமாகவும் மாணவர்கள் கேட்டு வழிகாட்டுதல்களை பெறலாம் என அதில் கூறியுள்ளார்.

Last Updated : Oct 9, 2020, 6:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.