மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் உள்ள மூன்றுமாடி கட்டடத்தில் செயல்பட்டுவரும் இரண்டு பெயிண்ட் கடைகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். பலர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர், கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் ஜே.ஏ.ஹெச்(JAH) மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் தற்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து