தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அமைச்சருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அதிமுகவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் பழனி, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு, கோவை சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.