ETV Bharat / bharat

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் காலமானார் - chhattisgarh

Ajit Jogi
Ajit Jogi
author img

By

Published : May 29, 2020, 3:56 PM IST

Updated : May 29, 2020, 7:55 PM IST

15:52 May 29

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி மாரடைப்பு காரணமாக காலமானார்.

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி மாரடைப்பு காரணமாக காலமானார். முன்னதாக, புதன்கிழமை இரவு அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது.  

உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர், ஒன்பது மாதங்களுக்கு முன்பு கோமாவில் இருந்து வந்தார். முன்னதாக, மே 9ஆம் தேதி அவருக்கு முதல்முறையாக   மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுவாசிக்க சிரமப்பட்டு வந்த ஜோகியை அவரது உறவினர்கள் ஸ்ரீ நாராயண மருத்துவமனையில் சேர்த்தனர். வென்டிலேட்டர் உதவியோடு அவர் சுவாசித்துவந்தார். மார்வாஹி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஜோகி, 2000ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஜனதா காங்கிரஸ் ஐந்து தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

Last Updated : May 29, 2020, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.