ETV Bharat / state

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அக்.7ல் அறிவிப்பு! - admk cm candidate announced

admk cm candidate  admk cm candidate announced  kp munusamy
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அக்.7ல் அறிவிப்பு
author img

By

Published : Sep 28, 2020, 3:14 PM IST

Updated : Sep 28, 2020, 8:39 PM IST

15:12 September 28

சென்னை: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும்- கே.பி. முனுசாமி

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார், வழிகாட்டுதல் குழு உள்ளிட்ட விவகாரங்களில் கட்சிக்குள் சிக்கல் உருவாகியிருந்த நிலையில், இன்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர், தேர்தல் பணிகள், வழிகாட்டதல் குழு அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்த விவாதிக்கப்பட்டது. 

இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.பி. முனுசாமி, "முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பார்கள்" என்றார்.

இதையும் படிங்க: விவசாயிகளை ஏமாற்றும் விஷவாயு எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு

Last Updated : Sep 28, 2020, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.