ETV Bharat / bharat

இந்தியா உள்பட 7 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவிநீக்கம்: ஜெலன்ஸ்கி அறிவிப்பு! - இந்தியா உள்பட 7 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவிநீக்கம்

இந்தியா உள்பட 7 நாடுகளின் தூதர்களை பதவிநீக்கம் செய்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி
author img

By

Published : Jul 10, 2022, 1:09 PM IST

கீவ்: இந்தியா உள்பட 7 நாடுகளின் தூதர்களை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று (ஜூலை 9) அறிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி பல நாட்களாக நடந்து வருகிறது. உக்ரைனிலிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை ஒன்றிய, மாநில அரசுகள் பாதுகாப்பாக மீட்டனர். ஒன்றிய அரசு 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டம் தொடங்கப்பட்டு இந்தியர்களை மீட்டது. இதன் மூலம் 22,500 இந்திய மாணவர்கள், மீட்டு வரப்பட்டனர்.

போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளதாககூறப்படுகிறது. இருதரப்பிலும், உயிர் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டு வருகிறது. உக்ரைனிற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயத உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே, வங்காளதேசம், மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான தூதர்களை பதவி நீக்கம் செய்து அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். பதவி நீக்கத்திற்கான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இதையும் படிங்க: Exclusive: “இலங்கையின் தற்போதைய நெருக்கடி உள்நாட்டுப் போரை விட மோசமானது ”- இலங்கை கப்பல் நிறுவன முன்னாள் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.