ETV Bharat / bharat

ஓமனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகிறாரா ஜாகிர் நாயக்?

தீவிர இஸ்லாமிய மதபோதகரான ஜாகிர் நாயக், ஓமனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓமனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகிறாரா ஜாகிர் நாயக்?
ஓமனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகிறாரா ஜாகிர் நாயக்?
author img

By

Published : Mar 22, 2023, 8:45 PM IST

ஹைதராபாத்: மகாராஷ்டிரா மாநிலத்தின் கோங்கன் பகுதியில் வசித்து வந்தவர், ஜாகிர் அப்துல் கரீம் நாயக். அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, இந்த ஜாகிர் நாயக் குடும்பத்துடன் மும்பையில் உள்ள டோங்கிரிக்கு குடிபெயர்ந்தார். இவரது குடும்பம் ஒரு மருத்துவ குடும்பம். எனவே, ஜாகிர் நாயக்கும் மருத்துவராக தன்னை உயர்த்திக் கொண்டு, மருத்துவத் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், இஸ்லாமிய மதபோதகரின் சந்திப்பு ஜாகிர் நாயக்குக்கு கிடைக்கிறது.

இந்த சந்திப்பில், இஸ்லாம் மதபோதகரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட ஜாகிர் நாயக், தன்னுடைய மருத்துவத் தொழிலை கைவிட்டார். இதனையடுத்து தானும் இஸ்லாமிய மதபோதனைகளை வழங்கத் தொடங்குகிறார். இதனால் மும்பை நகரம் முழுவதும் மதபோதனைகளை வழங்கினார், ஜாகிர் நாயக். இவ்வாறு மெல்ல மெல்ல மக்களைச் சென்றடைந்த ஜாகிர் நாயக்கை, மக்களும் பின்பற்றத் தொடங்கினர்.

மேலும் பல்வேறு இடங்களில் மதபோதனைகளை வழங்க ஜாகிர் நாயக்கை மக்கள் அழைத்தனர். இதன் காரணமாக, இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை 1991ஆம் ஆண்டு தொடங்கினார். அது மட்டுமல்லாமல் ‘பீஸ் டிவி’ (Peace TV) என்ற சேட்டிலைட் சேனலையும் ஜாகிர் நாயக் தொடங்கினார். இவரை 1 கோடியே 70 லட்சம் மக்கள் சமூக வலைதளங்களில் பின் தொடர்கிறார்கள். எனவே, இவர் தனது உரையை, நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்துகிறார்.

இதனிடயே பல்வேறு மத பிரிவினைவாத சர்ச்சைகள் இவர் மீது குவியத் தொடங்கின. முக்கியமாக கடந்த 2008ஆம் ஆண்டு தனது சேட்டிலைட் சேனல் வழியாக ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாகப் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு தாக்காவில் தாக்குதல் நடத்திய வங்காள தேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள், ஜாகிர் நாயக்கின் உரையால்தான் தாங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறினர்.

இதனையடுத்து பல்வேறு சட்ட ரீதியான பிரச்னைகளைச் சமாளிக்கும்பொருட்டு, 2017ஆம் ஆண்டு மலேசியாவுக்கு குடி பெயர்ந்தார், ஜாகிர் நாயக். இருப்பினும், மலேசிய அரசு, அந்நாட்டில் ஜாகிர் நாயக் உரை நிகழ்த்துவதற்கு தடை விதித்தது. அதேநேரம் 2017ஆம் ஆண்டு ஓமன் நாட்டில் மதபோதனைகளை வழங்குவதற்காக அந்நாட்டின் அழைப்பை ஏற்று, ஜாகிர் நாயக் ஓமனுக்குச் சென்றார்.

இதனையடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், பண மோசடி மற்றும் வெறுப்பு பிரசாரம் செய்தல் ஆகியவற்றால் ஜாகிர் நாயக்கின் எழுத்து மற்றும் உரை ஆகியவற்றிற்கு இந்தியா தடை விதித்தது. இந்த நிலையில் நாளை (மார்ச் 23) ஜாகிர் நாயக், ஓமனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும் முயற்சியில் இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்! 6 பேர் கைது - ஆம் ஆத்மிக்கு தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.