திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திக்கொடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 22 வயது பெண் மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துவிட்டு, தானும் தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், அங்கு விரைந்த காவலர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாதிக்கப்பட பெண் மருத்துவமனைக்கும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தீ வைத்த இளைஞர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், உயிரிழந்த பெண்ணு திக்கொடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிவந்தார். அவருக்கும் அந்த இளைஞருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெற்றோர்!