ETV Bharat / bharat

டயரை திருட முயன்ற நபரை அடித்துக் கொன்ற மக்கள் - ஜார்க்கண்ட் ராஞ்சி

ராஞ்சி: ஜார்க்கண்டில் வாகன டயரை திருட முயன்ற நபரை, ஊர் மக்கள் ஒன்றுத்திரண்டு மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ranchi
ராஞ்சி
author img

By

Published : Mar 14, 2021, 5:21 PM IST

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சிர்கா கிராமத்தில் நேற்றிரவு(மார்ச் 13), அங்கிருந்த வாகனங்களின் டயர், பேட்டரியை கழற்ற ஒருவர் முயற்சி செய்துள்ளார். அப்போது, அங்கு வந்த சிலர், கூச்சலிட்டதும், அந்நபர் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். உடனே அவரைச் சுற்றிவளைத்த கிராம மக்கள், மின் கம்பத்தில் கட்டி வைத்து, சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில் அவர் உயிரிழந்ததையடுத்து காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் முபாரக் கான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், முபாரக் கானின் உறவினர்களும், குடும்பத்தினரும் அவரை அடித்துக்கொன்ற கிராம மக்கள் 20 பேர் மீது புகார் அளித்துள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால், சிர்கா கிராமத்தில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய காவல் துறை எஸ்பி நவுசாத் ஆலம், "இவ்விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவ இடத்திற்குச் செல்கையில், வாகனங்கள் டயர், பேட்டரி ஆகியவை கழற்றப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்தோம். அதே சமயம், இறந்த முபாரக் கானுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது" என்றார்

இதையும் படிங்க: 'மாற்றி மாற்றி செருப்பால் அடித்துக் கொண்ட காதல் ஜோடி' - பாடாய் படுத்திய பஞ்சாயத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.