திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் எம்சி ரோடு பகுதியில் வனப்பகுதியிலிருந்து இறை தேடி ஊருக்குள் வந்த ஒரு வயது பெண் மயிலை நாய்கள் துரத்தியுள்ளது.
மயிலை காப்பாற்றிய இளைஞர்கள்
இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் நாய்களிடமிருந்து மயிலை மீட்டு வீடு ஒன்றின் கூண்டில் பத்திரமாக வைத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் மயிலை மீட்டு, சான்றோர் குப்பம் காப்புக்காடு பகுதிக்கு கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.