லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டம் ஜான்பூரில் வசித்து வந்தவர் வினீத் சிங். சிறுநீரக தொடர்பான நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைக்கு அவரது தாய் சந்திரகலா சிங்குடன் சென்றிருந்தார். ஆனால், வாரணாசியில் கரோனா வழக்குகள் அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லை.
ஆனால், வினீத்தின் உடல் நிலை மோசமடைந்தது. இருப்பினும் மருத்துவர்கள் அவருக்கு மருத்துவம் பார்க்கவில்லை என தெரிகிறது. . இதனால் வினீத்தை அவரது தாய் ககர்மாதாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கேயும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் வினீத் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கப் பெறாமல் அவரது தாய் முன்னே மூச்சுத் திணறி உயிரிழந்தார். இவரைப் போலவே நாட்டில் பலரும் கரோனா வைரஸைக் காரணம் காட்டி சிகிச்சைகள் மறுக்கப்பட்டு உயிரிழந்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் உயிரிழந்த வினீத்துடன் அவரது தாயார் ஆதரவின்றி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.