ETV Bharat / bharat

ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்து சென்று இளம்பெண்ணுக்கு கத்தி குத்து - Adarsh Nagar Youth stabbing

டெல்லியில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்து சென்று இளம்பெண்ணுக்கு கத்தி குத்து

author img

By

Published : Jan 4, 2023, 10:35 AM IST

Updated : Jan 4, 2023, 11:52 AM IST

ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்து சென்று இளம்பெண்ணுக்கு கத்தி குத்து

டெல்லியில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற இளைஞர் இன்று (ஜனவரி 4) கைது செய்யப்பட்டார். இவர் ஜனவரி 2ஆம் ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்று தான் மறைந்து வைத்திருந்த கத்தியால் பல முறை வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

இந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி அந்த இளைஞரை இன்று (ஜனவரி 4) கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில் இவரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ படிக்கும் ஒன்றாக படித்துள்ளனர் என்பதும் அப்போது இருவரும் நெருங்கி பழகியதும் தெரியவந்துள்ளது. இதனிடையே இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி

Last Updated : Jan 4, 2023, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.