ETV Bharat / bharat

கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பெண்ணின் டீப் ஃபேக் புகைப்படங்களை வெளியிட்ட இளைஞர் கைது! - posting deepfake photos of woman on internet

Deepfake issue in Bangalore: கர்நாடகாவில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்களாக ‘டீப் ஃபேக்’ மூலம் எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலை மறுத்ததால் பெண்ணின் டீப் ஃபேக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இளைஞர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 9:10 AM IST

பெங்களூரு: ‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலியான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், காதலிக்க மறுத்ததற்காக இளம்பெண் மற்றும் அவரின் இரு நண்பர்களின் புகைப்படங்களை, நிர்வாண புகைப்படங்களாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டீப்ஃபேக் மூலம் சாதாரண புகைப்படங்களை, நிர்வாண புகைப்படங்களாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய கர்நாடக மாநிலம் கானாபூரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘டீப் ஃபேக்’ என்ற ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் மூலமாக போலியான வீடியோக்களும், புகைப்படங்களும் சமீப காலமாக இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருந்திய போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, ‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை கத்ரீனா கைஃப்பின் போலி புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர் ஒருவர், பெண் ஒருவரிடம் தான் காதலிப்பதாக கூறியுள்ளார். இவரின் காதலை அந்த பெண் ஏற்க மறுத்ததால், அவரையும் அவர் நண்பர்களையும் இளைஞர் மிரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, காதலிக்க மறுத்த பெண்ணின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி கணக்கை உருவாக்கி, காதலித்த பெண் மற்றும் அவரது நண்பர்களின் புகைப்படங்களை, டீப்ஃபேக் மூலமாக நிர்வாண புகைப்படங்களாக எடிட் செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கானாபூர் போலீசாரிடல் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், கானாபூர் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், பெண்ணின் புகைப்படங்களை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய கானாபூரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பீமா சங்கர் குலேத் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூக வலைத்தளக் கணக்கிலிருந்து அவரின் புகைப்படங்களை எடுத்து, டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, சைபர் கிரைமில் அந்த நபரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும், இது போன்ற சம்பவங்களால் பல இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் இந்த பெண் தைரியமாக, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து புகார் அளித்ததால், குற்றம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணின் துணிச்சலுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, அநீதி இழைக்கப்பட்டால் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: Deep fake: மக்களை அச்சுறுத்தும் டீப் பேக் தொழில்நுட்பம்..! போலியாக உருவாக்கப்பட்டதை கண்டறிவது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.