ETV Bharat / bharat

கேரளாவில் இளம்பெண்ணை கடத்திய கும்பல்: காவல் துறையினர் தீவிர விசாரணை - கேரள காவல் துறையினர்

ஆலப்புழா: மன்னாரில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண்ணை கடத்திய கும்பலைப் பிடிக்க காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Young woman abducted in Mannar by unknown men

author img

By

Published : Feb 22, 2021, 4:43 PM IST

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மன்னாரில் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை கடத்திய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்னார் குருட்டிகாட்டில் வசிக்கும் பிந்து என்ற பெண் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். அவர் பிப்ரவரி 19-ஆம் தேதியன்று துபாயிலிருந்து வந்திருக்கிறார்.

அப்பெண்ணைக் கடத்திய கடத்தல்காரர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. இச்சம்பவத்திற்கு முந்தைய நாள் பிந்து வீட்டிற்கு வந்த சில ஆண்கள், தங்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது. தங்கம் பிந்து வசம் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் திரும்பியுள்ளனர்.

ஆனால், அவர்கள் மீண்டும் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் வந்து பிந்துவை கடத்திச் சென்றதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பிந்துவின் கணவர் பினோ காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, கடத்தல்காரர்கள் மலப்புரத்தின் கொடுவள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர், மன்னார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.