டெல்லி: தலைநகர் டெல்லியின் பாவனா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 10ஆம் தேதி ஜோடி ஒன்று அறை எடுத்து தங்கி உள்ளது. அறைக்காக ஒதுக்கப்பட்ட வாடகை நேரம் முடிந்த பின்னரும் ஜோடி வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மாற்று சாவி மூலம் விடுதி ஊழியர்கள் அறையை திறந்து பார்த்த நிலையில், இருவரும் சடலமாக இருந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் அறையில் உயிரற்று கிடந்த ஆண் மற்றும் பெண்ணின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்த பெண்ணின் கழுத்து பகுதியில் ரத்தக் காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை கொலைசெய்து விட்டு இளைஞரும் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அறையில் இருந்து போதைப் பொருள், மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இருவரிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டு இறந்தவர் விமல் என அடையாளம் காணப்பட்டு தொடர் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையின் மரபை மீறியவர் ஆளுநர் ஆர்.என்.ரவி - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கண்டனம்