பெங்களூரு : பிரதமர்- முதலமைச்சர் சந்திப்புக்கு பின்னர் கர்நாடக அரசியலில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறிவருகின்றன.
இதற்கிடையில் தனது இரண்டாண்டு ஆட்சி நிறைவை கொண்டாடும் வகையில் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா அனைத்துக் கட்சியினருக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தத் தேநீர் விருந்து வருகிற 25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 26ஆம் தேதி எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக யூகங்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் எடியூரப்பா பதவி விலக போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதனை திட்டவட்டமாக மறுத்த எடியூரப்பா இல்லை.. இல்லவே இல்லை... என்றார்.
இதற்கிடையில் ஜூலை 26ஆம் தேதி எடியூர்பா பதவி விலக போகிறார் என்றும் மீண்டும் யூகங்கள் வெளியாகி, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
இதையும் படிங்க : கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம்? தீயாய் பரவும் ஆடியோ!