ETV Bharat / bharat

பாதுகாப்பு அச்சுறுத்தல் : பா.ஜ.க. தலைவர்கள் 4 பேருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு - பஞ்சாப்

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த 4 பேருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 'X' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
author img

By

Published : Nov 19, 2022, 1:18 PM IST

சண்டிகர்: பஞ்சாப்பில், கடந்த ஆட்சியின் போது அமைச்சர் பதவி வகித்தவர்கள் பால்பிர் சிங் சித்து, குர்பிரீத் சிங் கங்கா. இவர்களுடன் எம்.எல்.ஏ. ஜகதீப் சிங் உள்ளிட்ட நான்கு பேர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த நிலையில், இவர்கள் மீது எந்த நேரத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் துறை அறிக்கை அளித்துள்ளது.

நான்கு பேருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஐ.பி. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, நான்கு பேருக்கும் X பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சிவசேனா தலைவர் சுதிர் சூரி கொலைக்குப் பிறகு, பஞ்சாபில் நிலைமை மோசமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சில தலைவர்களுக்கு மிரட்டல் வருவதை அடுத்து, சிவசேனா தலைவர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆம் ஆத்மி அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.