ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி - பிரத்யேக பேட்டி

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தனது அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார். அவருடன் ஈடிவி பாரத்தின் சௌரப் ஷர்மா நடத்திய நேர்காணலை பார்க்கலாம்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஈடிவி பாரத்திற்கு அளித்த  பிரத்யேக பேட்டி

author img

By

Published : Jun 24, 2022, 10:18 AM IST

டெல்லி: அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சின்ஹாவின் பதவிக்காலம், அவரின் அரசியல் வாழ்க்கை பல ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது. சமீபகாலமாக, நரேந்திர மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்களில் இவரும் ஒருவர்.

ஈடிவி பாரத்தின் செய்தியாளர் சௌரப் ஷர்மாவுடனான ஒரு பிரத்யேக நேர்காணலில், சின்ஹா அவரது அரசியலில் சித்தாந்தப் போர் மற்றும் நிர்வாக வாழ்க்கை குறித்து பதிலளித்துள்ளார். மேலும் போட்டியாளரான திரௌபதி முர்முவின் வேட்புமனுவை எப்படி உணர்கிறார் என்பதைப் பற்றி பேசுகிறார்.

ஈடிவி பாரத் செய்தியாளர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகளில் ஒரு சதவீதம் குறைவாகவே உள்ளது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற எப்படி திட்டமிட்டு உள்ளீர்கள்?

சின்ஹா: எங்களிடம் ஒரு யுக்தி உள்ளது. ஆனால் இந்த யுக்தியை என்னால் ஊடகங்களிடம் கூற முடியாது. ஏனெனில் அவ்வாறு கூறினால் அது ஒரு யுக்தியாக இருக்காது. நாங்கள் இந்த யுக்தியை செயல்படுத்துவதற்கு அதிக வேலை செய்துள்ளோம். நாங்கள் இதில் ஏமாற்றம் அடைய வாய்ப்பு இல்லை.

ஈடிவி பாரத் செய்தியாளர்: பீகார், ஜார்கண்ட், ஒடிசா மாநில முதல்வர்களிடம் பேசியிருக்கிறீர்களா?

சின்ஹா: என் சார்பாக நிறைய பேர் அவர்களிடம் பேசுகிறார்கள். நான் இன்னும் அவர்களிடம் பேசவில்லை.

ஈடிவி பாரத் செய்தியாளர்: நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்த பின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான உங்கள் திட்டம் என்ன? உங்கள் பிரச்சாரத்தை எங்கிருந்து தொடங்குவீர்கள்?

சின்ஹா:எனது பிரச்சாரத்தை பீகாரில் இருந்து தொடங்குவேன். ஆனால் நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் பீகாருக்கு செல்வேனா அல்லது வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நான் செல்வேனா என்பது பற்றி விவாதித்து பின் செல்வேன். பீகாரில் இருந்து பின்னர் நான் ஜார்கண்ட் செல்வேன். தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வருவேன்.

ஈடிவி பாரத் செய்தியாளர்: நீங்கள் கூறிய முதல் அறிக்கையில், இந்த போட்டி உங்களுக்கும் அவருக்கும் (திரௌபதி முர்மு) இடையே நடக்கும் போட்டி இல்லை. ஆனால் இது இருவேறு சித்தாந்தத்திற்கு இடையேயான சண்டை என்று எடுத்துக்காட்டினீர்களா?

சின்ஹா:இது மிகவும் எளிமையானது. நான் போட்டியிடப் போவதை அறிந்ததும் பலர் என்னிடம், ‘உங்களுக்கு எதிராக ஒரு பெண் போட்டியிட இருப்பதாகவும், அவர் ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், இதனால் அவர் மிகுந்த அனுதாபங்களை பெறப்போவதாகவும் கூறினார்கள். ஆனால் இதுபோன்ற அறிவுரைகளுக்கு எனது பதில் என்னவென்றால், ஒருவரின் மதிப்பை யாரும் தீர்மானிக்கப் போவதில்லை. உதாரணமாக நான் இந்த குடும்பத்திலோ அல்லது இந்த சமூகத்திலோ பிறப்பேன் என்று யாரும் தீர்மானிக்க மாட்டார்கள். அதனால் நான் இந்தக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கவில்லை, அவரும் (திரௌபதி முர்மு) அதை தீர்மானிக்கவில்லை.

மேலும் அது ஒரு பிரச்சினையும் கிடையாது. மக்களின் நலன் மற்றும் எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் பிற நலிந்த பிரிவினரை உள்ளடக்கிய நலிந்த பிரிவினரின் முன்னேற்றம்தான் பிரச்சினை. இந்த கேள்விக்கு எனது பதில் என்னவென்றால், நான் நிதியமைச்சராக இருந்த காலத்தில், நான் தாக்கல் செய்த ஐந்து பட்ஜெட்களில், இந்த நாட்டின் எஸ்சி, மற்றும் எஸ்டி மக்களின் நலனுக்காக பாடுபட்டேன். நான் எப்போதும் அவர்களுக்கு நலன் அளிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளேன்.

முன்னதாக வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருக்கும் போது வடகிழக்கில் உருவான பிரச்சனைகளுக்காக புதிய அமைச்சகத்தை உருவாக்கியது. வடகிழக்கு முழுவதுமே பெரும்பாலும் பழங்குடியினர் வாழ்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அதுதான் எங்கள் அரசாங்கத்தின் அணுகுமுறை. எனவே நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பழங்குடியின மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. நான் பீகாரில் உள்ள பழங்குடியின மாவட்டமான கிரியில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக பணியில் இருந்துள்ளேன். நான் அந்த மாவட்டத்தில்தான் எனது ஐஏஎஸ் வாழ்க்கையைத் தொடங்கினேன், எனது பதவி காலத்தில் அவர்களின் நலனுக்காகப் பணியாற்றினேன்.

அப்போது, ​​நான் ஜார்க்கண்டில் உள்ள சந்தால் பர்கானா மாவட்டத்தில் துணை ஆணையராகப் பணிபுரிந்தேன். எனவே ஒரு ஐஏஎஸ் மற்றும் அரசியல் தலைவர் என்ற முறையில் எனது முழு வாழ்க்கை விவரமும் பொது களத்தில்தான் இருந்தது. மீண்டும் நான் பீகாரின் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மற்றும் தற்போதைய ராம்சுந்தர் தாஸ் ஆகியோருக்கு முதன்மைச் செயலாளராக இருந்தபோது, ​​கீழ்த்தட்டு மக்களுக்காக நிறைய உழைத்தேன். ஐஏஎஸ் ஆகவும், அரசியல் தலைவராகவும் பழங்குடியினருடன் இணைந்து பணியாற்றினேன், அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டேன்.

பழங்குடியினர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முர்மு ஆற்றிய பணிகள் குறித்த பதிவுகளை எனது முன் உள்ள வேட்பாளர் பொது களத்தில் வெளியிட விரும்புகிறேன். அவர் தனது சமூகம் மற்றும் பிற நலிந்த பிரிவினருக்கு எப்படி உதவியுள்ளார்? அவர் ஒடிசாவில் அமைச்சராகவும், ஜார்கண்டிலும் ஆளுநராகவும் இருந்த போது பணியாற்றியுள்ளார் என்பது குறித்து வெளியிட விரும்புகிறேன்.

ஈடிவி பாரத் செய்தியாளர்: இந்தியாவில் இதுவரை ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை. தற்போது குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்முவை முன்னிறுத்துவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இது பாஜக ஆடும் அரசியலற்ற சூதாட்டம் என்று நினைக்கிறீர்களா?

சின்ஹாசின்ஹா: இதுவரை நம் இந்தியாவில் ‘Y’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட குடியரசுத் தலைவர் கூட இருந்ததில்லை? எனவே இதுவும் முதல் முறை.2017ல் ஏன் முர்முவை ஜனாதிபதியாக்கவில்லை? நீங்கள் மோடி அரசைக் கேளுங்கள்.

ஈடிவி பாரத் செய்தியாளர்: பல அரசியல் தலைவர்கள் முர்முவுடனான போட்டியிலிருந்து யஷ்வந்த் சின்ஹா பின்வாங்க வேண்டும் என்றும், உங்களது வயது அதிகமாகியுள்ளதால் போட்டியிட வேண்டாம் எனவும் கூறி வருகிறார்கள். இது முடிவு தெரிந்த போரில் போட்டியிடுகிறீர்களா?

சின்ஹா: இது முற்றிலும் தவறான கூற்று. நான் திரும்பப் பெற வேண்டும் என்று யாரெல்லாம் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏன் திரும்பப் பெற வேண்டும்? நான் விலக வேண்டும் என்று யாரும் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இது இரு சித்தாந்தத்தின் போர். நான் விலக வேண்டும் என்ற இந்தக் கேள்வி எங்கிருந்து வருகிறது! இவை முட்டாள்தனமானவர்களின் முட்டாள்தனமான கூற்றுகள். என் வேட்புமனு பற்றிய அறிவிப்பு அவருக்கு முன்பே (திரௌபதி முர்மு) அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த அரசாங்கம் ஒருமித்த கருத்தை உருவாக்க விரும்பினால், திரௌபதி முர்மு எங்கள் வேட்பாளர் என்று அவர்கள் முன்னதாகவே கூறியிருக்க வேண்டும்.

முர்முவை பலமான வேட்பாளராக உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று அவர்களிடம் (பாஜக) போய் கேளுங்கள். இந்த அரசு ஒருமித்த கருத்து அடிப்படையில் செயல்படவில்லை என்பதே எனது புகார். இது 'மோதல்' அடிப்படையில் செயல்படுகிறது. இறந்த போரில், நீங்கள் போருக்குச் செல்லும்போது நீங்கள் பாதுகாப்பாகவும் உயிருடனும் வருவீர்கள் என்று உத்தரவாதம் அளிக்க முடியும். ஆனால் நீங்கள் ஒரு சிப்பாயை போருக்கு அனுப்பினால், மரண ஆபத்து எப்போதும் இருக்கும். அதனால் படைவீரன் போருக்குச் செல்லமாட்டான்!

ஈடிவி பாரத் செய்தியாளர்: ஃபரூக் அப்துல்லா, சரத் பவார் மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்டனர், எனவே உங்களை முதலில் அணுகியது யார்?

சின்ஹா: அவர்களுக்கு அவர்களின் சொந்த எண்ணங்கள் இருக்கலாம், எனக்கு என்னுடைய சொந்த எண்ணங்கள் இருக்கலாம். சரத் பவார் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் என்னை சந்தித்து முதலில் இது குறித்து பேசினர்.

இதையும் படிங்க:பிரதமர் மோடியைச் சந்தித்தார் திரௌபதி முர்மு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.