நாட்டின் கோவிட்-19 நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "என்னுடைய எண்ணப்படி, இந்தியா கோவிட்-19 பாதிப்பின் மோசமான காலத்தை கடந்துவிட்டது.
2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதிமுதல் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நான் கண்காணித்துவருகிறேன். அதை வைத்துப் பார்க்கும்போது கடந்த மூன்று மாத காலமாக பாதிப்பு குறைந்துவருகிறது என நிச்சயம் கூறலாம்.
குணமடைவோரின் எண்ணிக்கை அதிகம்
அதேவேளை மக்கள் விதிமுறைகளை கவனத்துடன் தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம். உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 95-96 விழுக்காடாக உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் குணமடைந்தோரின் எண்ணிக்கைக 80 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது.
வரும் ஜனவரி மாதத்தில் தடுப்பூசி தயாராகி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இந்தியாவில் இதுவரை, ஒரு கோடியே 30 ஆயிரத்து 223 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதச்சார்பற்ற ஜனதா தளம்-பாஜகவுடன் இணைகிறதா?